ஸ்ரீ லங்கன் விமானப் போக்குவரத்துகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/25/2020 10:51:00 AM
ஸ்ரீ லங்கன் விமானப் போக்குவரத்துகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமானப் போக்குவரத்துகளும் மே மாதம் 15ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி விமான சேவை மற்றும் விசேட விமானப் போக்குவரத்துகள் மாத்திரம் இடம்பெறும் என்றும் குறித்த விமான சேவைகள் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பயணிகள் தமது முகவர் நிலையங்களின் ஊடாக அல்லது அருகிலுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், +94117771979 என்ற இலக்கத்தின் ஊடாக ஸ்ரீ லங்கன் விமான வாடிக்கையாளர் சேவையினூடாகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே இதனைத் தெரிவித்துள்ளது.

Share