கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 40 வீதமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/25/2020 1:53:00 AM
கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 40 வீதமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நேற்று (24) கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் 52 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, அதுவே இலங்கையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய தொகையும் ஆகும். இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் தொகையில் இது 12 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 30 பேர் வெலிசரை கடற்படை முகாமைச் சேர்ந்த படை வீரர்களாவர்.

இதற்கு மேலதிகமாக, குறித்த கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற 5 படை வீரர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்படை முகாமுடன் தொடர்புடைய 65 பேர் இதுவரையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அது இலங்கையில் பதிவான மொத்த நோயாளர் தொகையில் 15 வீதத்தைவிட அதிகமாகும்.

இதற்கு முன்னர் கடந்த 23ஆம் திகதி அதிகூடிய நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதோடுஇ ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மூன்றாவது அதிகூடிய நோயாளர்கள் பதிவாயினர்.

நேற்று ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி 38 நோயாளர்களும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி 33 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 175 பேர் பதிவாகியுள்ளதோடுஇ இதுவரையில் இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களில் இது 41 சதவீதமாகும்.


இறுதி 7 நாட்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவான விதம்

  • ஏப்ரல் 18 – 10
  • ஏப்ரல் 19 – 17
  • ஏப்ரல் 20 – 33
  • ஏப்ரல் 21 – 06
  • ஏப்ரல் 22 – 20
  • ஏப்ரல் 23 – 38
  • ஏப்ரல் 24 – 52

தற்போதளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 304 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 109 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும், 183 பேர் கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share