இன்றைய 47 நோயாளர்களும் கண்டறியப்பட்ட பிரதேசங்கள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 24. 04. 2020 | 7.45pm
இன்றைய 47 நோயாளர்களும் கண்டறியப்பட்ட பிரதேசங்கள்

இன்று (24) இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 47 பேர் கண்டறியப்பட்டுள்ளதோடு, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் தொகை 415 வரை அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

11 நோயாளர்கள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கடற்படை முகாமைச் சேர்ந்த படை வீரர்கள் என்றும் தெரியவருகின்றது. 

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்ற 5 கடற்படை வீரர்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

அவர்கள் கீழ்வரும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்,

இரத்தினபுரி- ஹிதில்ல

பொல்கஹவெல- உடபொல

குருணாகலை- கீனியாபொல

கிராதுருகோட்டை- பஹல ரத்கிந்த

தபுள்ளை- அதபோதிவெவ

ஏனையவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருதானையைச் சேர்ந்த பெண்ணொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Share