கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 379ஆக அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 24. 04. 2020 | 11.33am
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 379ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 379ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 06; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளான 107 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update : 11.33 AM

இலங்கையில் மேலும் 05 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 373 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.
Share