வெலிசரை கடற்படை முகாமில் 30 பேருக்கு கொரோனா தொற்று

Staff Writer | Author . Translate to English or සිංහල 23. 04. 2020 | 9.19pm
வெலிசரை கடற்படை முகாமில் 30 பேருக்கு கொரோனா தொற்று

வெலிசரை கடற்படை முகாமில் 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

வெலிசரை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமில் உள்ள சிலர் இன்று (23) பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலருக்கு சந்தேகத்துக்குரிய நோய் அறிகுறிகள் வெளிப்பட்டதால் இரண்டாம் முறையும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

வெலிசரை கடற்படை முகாமில் சேவையாற்றிய கடற்படை வீரர்கள் இருவர் அங்கிருந்து சென்றதன் பின்னர் கோவிட் 19 கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்தே ஏனையோர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இன்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளுக்கு ஏற்ப 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கேற்ப வெலிசரை கடற்படை முகாமில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 30 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கு முன்னர் கொரோனா என உறுதியான இருவரும் பொளன்னறுவை மற்றும் வாறியபொலையைச் சேர்ந்தவர்களாவர். வெலிசரை கடற்படை முகாமில் சேவையாற்றிவிட்டு விடுமுறையில் வீடு சென்ற வாறியபொலை நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இன்று மாலையே கண்டறியப்பட்டுள்ளது.  

Share