வெலிசரை கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது- கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றிய விதமும் சந்தேகத்துக்குரியதே

Staff Writer | Author . Translate to English or සිංහල 23. 04. 2020 | 12.04
வெலிசரை கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது- கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றிய விதமும் சந்தேகத்துக்குரியதே

தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கட்டளைத் தளபதி இசுரு சூரியபண்டார Medialk.com க்குத் தெரிவித்தார். 

குறித்த கடற்படை வீரர் கடந்த 17ஆம் திகதி விடுமுறை பெற்று பொளன்னறுவை புளஸ்திகமைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சுகயீனமுற்றதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதற்குப் பின்னர் கடற்படை வீரர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 

இதுதொடர்பாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாவது,

அவருக்கு கீழ்வரும் மூன்று விதத்தால், ஏதாவதொன்றின் மூலமே நோய் தொற்றியிருக்கலாம். ஒன்று கடற்படை முகாமுக்கு உள்ளே. அடுத்தது, அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில், மூன்றாவது, அவர் வீட்டுக்குச் சென்றதன் பின்னர். அவருக்கு எந்த விதத்தில் கொரோனா தொற்றியிருக்கலாம் என்பது குறித்து தேடிப் பார்க்கின்றோம். அவரோடு தொடர்புகளைப் பேணியவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர் இருந்த இடத்தில் மூன்று முகாம்கள் காணப்படுகின்றன. அவர் இருந்த ஒரு முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த கடற்படை வீரர் சாதாரண மக்களுடன் தொடர்புபடும் விதத்தில் இருந்தவர் அல்ல. அவரது பணி முகாமுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாகும். எனவே அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென்பது கேள்வியாகவே இருந்து வருகின்றது- என்றார்.

Share