அரசியலமைப்பு தொடர்பான சிக்கல் வெளிநாட்டு சதியே- அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்

Staff Writer | Author . Translate to English or සිංහල 23. 04. 2020 | 11.29am
அரசியலமைப்பு தொடர்பான சிக்கல் வெளிநாட்டு சதியே- அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்

அரசியலமைப்பு சிக்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் வெளிநாட்டு தேவையொன்றுக்கு ஏற்ப நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று (23) அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

களைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஒன்றுகூட்டுவதற்கு ஜனாதிபதி எவ்விதத்திலும் தயாராக இல்லை. அரசியலமைப்பின் ஊடாக நிதி விடயங்களைக் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்குரியதாகும். எனவே, எவ்வித சிக்கலும் இல்லை. 

புதிய பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டு மூன்று மாதங்கள் செல்லும் வரையிலும் நிதி விடயங்களைக் கையாளும் அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.

நாட்டில் சிலர் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களின் அளவுக்கு இது ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை என்று நீங்கள் கூறுகின்றீர்களா? என்ற ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்க, ஆம் இது ஒன்றும் பெரிய சிக்கல் அல்ல என்று அவர் பதிலளித்தார்.

Share