இந்தியாவில் சுகாதார சேவகர்களைத் தாக்கினால் 7 வருட சிறைத் தண்டனை

Staff Writer | Author . Translate to English or සිංහල 22. 04. 2020 | 10.02pm
இந்தியாவில் சுகாதார சேவகர்களைத் தாக்கினால் 7 வருட சிறைத் தண்டனை

மருத்துவர்கள் உட்பட ஏனைய சுகாதார சேவகர்கள் மீதான தாக்குதல்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 7 வருட சிறைத் தண்டனை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது.

மருத்துவர்கள், தாதியர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களைப் பரிசோதனையில் ஈடுபடுத்த முற்பட்ட சந்தர்ப்பங்களில் சுகாதார சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவலாம் என்று கூறி, கிராமத்தவர்கள் மருத்துவர்களைத் துறத்தி அடித்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது. 

புதிய சட்டம் புதனன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட 123 வருடங்கள் பழமையான தொற்று நோய் சட்டத்தின் ஒரு பிரிவாகவே இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. 

இந்த சட்டத்தை மீறுவோருக்கு 65,000 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share