இந்தியாவில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 8.07pm
இந்தியாவில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு த இந்து செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 167 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாகவும் ப்ரஹன் மும்பாய் மாநகர சபை மருத்துவக் குழுவை மேற்கொள்காட்டி த இந்து செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மும்பாயில் ஊடகவியலாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும், தொழில்சார் ஊடகவியலாளர்கள் தேவையான சுய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணியாற்றுமாறும் இந்திய சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்வதற்கான முகாமொன்று கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஆசாத் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை முகாமில் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளது. ப்ரஹன் மும்பாய் மாநகர சபை மருத்துவ குழு ஏற்பாடு செய்திருந்த இந்த பரிசோதனை முகாமைத் தொடர்ந்தே 53 ஊடகவியலாளர்கள் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியா டீவி நிவ்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Share