கொரோனா தொற்று காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பூட்டு

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 1.06pm
கொரோனா தொற்று காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பூட்டு

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்ட காரணத்தால் அந்தத் திணைக்களத்தை முழுமையாக மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நடைபெறும் வழக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் சட்டத்தரணிகள் பங்கேற்க முடியாது போகும் என்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

குறித்த பாதுகாப்பு அதிகாரி திணைக்களத்தினுள் உணவு விநியோகித்துள்ளதாகவும், அவர் அங்குள்ள அதிகாரியொருவரின் உறவினராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாக அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமானதொரு தினத்திற்கு வழக்குகளை ஒத்திவைக்குமாறும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

 

Share