ஊரடங்குச் சட்ட அறிவிப்பில் மாற்றம்: நான்கு மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் தடை

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 11.07am
ஊரடங்குச் சட்ட அறிவிப்பில் மாற்றம்: நான்கு மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் தடை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை இரவு 8.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 24ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு 8.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடரும். 

அதற்கமைய வார இறுதி நாட்களான 25ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுலில் இருக்கும். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு ஏற்கனவே இருந்த நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படும்.

Share