இந்திய கடற்படை முகாம் ஒன்றில் கொரோனா பரவல்

Staff Writer | Author . Translate to English or සිංහල 18. 04. 2020 | 11.56pm
இந்திய கடற்படை முகாம் ஒன்றில் கொரோனா பரவல்
இந்தியாவின் மும்பாயில் அமைந்துள்ள கடற்படை முகாம் ஒன்றில் கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேற்கு கடற்படை பிரிவுக்குரிய INS Angre கடற்படை முகாமில் 21 கடற்படை அதிகாரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

எனினும், கடற்படை கப்பல் ஒன்றிலோ அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களிலோ நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்படவில்லை என்றும் அந்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை அதிகாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய கடற்படை அதிகாரிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய போதே அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி நோய்த்தொற்றுக்குள்ளான 2 பேரும் ஒரே விடுதியில் தங்கியிருந்ததாகவும் அந்த விடுதி தற்போது லொக்டவுன் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share