தனிமைப்படுத்தப்பட வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைவிடப்பட்ட நிலையில் குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்தில்

Staff Writer | Author . Translate to English or සිංහල 17. 04. 2020 | 11.22am
தனிமைப்படுத்தப்பட வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைவிடப்பட்ட நிலையில் குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்தில்

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்காக குணசிங்கபுர பிரதேசத்தில் ஒன்றுதிரட்டப்பட்டவர்கள் சுமார் ஒன்றரை நாட்களாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படாமல் அங்கு கைவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மற்றும் சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களது தனித்துவத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் காணப்படாத காரணத்தினாலேயே இவ்வாறு கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. 

அவர்களில் ஒருவருக்கு நேற்று இரவு (16) கொரோனா நோயறிகுறிகள் வெளிப்பட்டு சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அது கொரோனா நோய்த்தொற்று என உறுதியாகும் போது நூற்றுக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அவதானம் இருப்பதாகவும் தெரியவருகிறது. 

இவ்வாறு கைவிடப்பட்டுள்ளவர்களுக்கு டேம் வீதி பொலிஸார் ஆகார பானங்களை வழங்கி வருகின்றனர். பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களது விடயங்களை கவனித்து வருகின்றனர். 

இது தொட‌ர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் வினவுவதற்கு பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் ஆகியோரைத் தொடர்புகொள்ள முயற்சித்தாலும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

Share