முதலீட்டு சபையின் கீழுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை

Staff Writer | Author . Translate to English or සිංහල 16. 04. 2020 | 10.21pm
       முதலீட்டு சபையின் கீழுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை

இலங்கை முதலீட்டு சபையின் கீழுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. 

படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளைத் திறந்து உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் மேற்கண்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதே இதன் நோக்கம் என முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹொட்டால தெரிவித்தார். 

தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஊரடங்குச்சட்ட அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு [email protected] என்ற மின்னஞ்சலின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதற்குத் தேவையான வசதிகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை முதலீட்டு சபை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Share