கொரோனாவுக்கு மேலும் இரு தடுப்பூசிகளைப் பரிசோதிக்க சீனா அனுமதி

Staff Writer | Author . Translate to English or සිංහල 15. 04. 2020 | 8.27am
கொரோனாவுக்கு மேலும் இரு தடுப்பூசிகளைப் பரிசோதிக்க சீனா அனுமதி

வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் நோயாளிகளைக் குறைப்பதற்கும் கோவிட் 19 இரண்டாம் கட்ட பரவலைத் தடுப்பதற்கும் போராடி வருகின்ற சீனா, பரீட்சார்த்த வைரஸ் தடுப்பூசிகள் இரண்டை மனிதப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. 

பீஜிங் சினோவவெக் பயோடெக் மற்றும் சீன தேசிய ஒளடத சமூகத்துடன் இணைந்த வூஹான் உயிரியல் விஞ்ஞான உற்பத்தி நிறுவனம் இந்த கொரோனா கட்டுப்பாட்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது.

சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவும் இந்த பரீட்சார்த்த முயற்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மிலிடரி மருத்துவ விஞ்ஞான எகடெமி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான கென்சினோ பயோ நிறுவனம் தயாரித்திருந்த கொரோனா தொற்றுத் தடுப்பு மருந்தையும் பரிசோதித்துப் பார்க்க மார்ச் மாதம் சீனா அனுமதி வழங்கியிருந்ததோடு, அது பரிசோதனைகளில் இரண்டாம் கட்டத்தில் இருக்கின்றதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மேற்படி பரிசோதனைக்கு 500க்கு மேற்பட்டவர்கள் சுய விருப்பின் பேரில் முன்வந்துள்ளனர். 

அதன்படி, சீனாவில் இதுவரை மூன்று விசேட கொரோனா தடுப்பூசிகள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கூறமுடியும்.

உலகில் பாரியளவில் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு முன்னர் காட்டுப்பாடுகள் பலதும் பூரணப்படுத்தப்பட வேண்டும் என்று சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share