உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான நிதியுதவிகளை இரத்துச் செய்த அமெரிக்கா

Staff Writer | Author . Translate to English or සිංහල 15. 04. 2020 | 7.56am
உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான நிதியுதவிகளை இரத்துச் செய்த அமெரிக்கா

உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்துச் செய்துள்ளார்.

கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிரான செயற்பாடுகள் தோல்வியுற்றதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அது சீனா வழங்கிய போலித் தகவல்களை வலுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

‘உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான நிதியுதவிகளை இரத்துச் செய்யுமாறு நான் எமது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றேன். கொரோ வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தேடி ஆராயவுள்ளோம்’ என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

காலத்துக்குப் பொருத்தமான மற்றும் வினைத்திறன்மிக்க தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வைரஸ் குறித்து அவதானமாக இருப்பதற்கும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் தவறியுள்ளது. சீனா அதிகாரிகள் கோபிப்பார்கள் என்ற பயத்தால் கோவிட் 19 நோய்த் தொற்று குறித்து ஆரம்ப கட்ட தகவல்களை மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share