சமூக ஊடக அழுத்தம் வெற்றியளித்துள்ளது: புதுவித தண்டனை வழங்கிய பொலிஸாரின் வேலை இடைநிறுத்தம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 13. 04. 2020 | 2.21pm
சமூக ஊடக அழுத்தம் வெற்றியளித்துள்ளது: புதுவித தண்டனை வழங்கிய பொலிஸாரின் வேலை இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது டாலி வீதியில் சென்ற நான்கு பேருக்கு எதிராக சட்டத்துக்கு வெளியே தண்டனை வழங்கிய அதிகாரிகள் இருவரின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நால்வருக்கும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து- எழும்பும் விதமாக தண்டனை வழங்கி, பொலிஸார் அவர்களைத் தண்டித்துள்ளனர்.  

இவ்விடயம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலானது.

பொலிஸார் இருவரும் கொழும்பு நகராட்சி போக்குவரத்து பிரிவைச் சேர்ந்தவர்க் என்பதால், கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் அவர்களது வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share