ஏப்ரல் 14ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படாது

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 7.41pm
ஏப்ரல் 14ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படாது

கொரோனா வைரஸ் தொற்று அவதானமுள்ள பிரதேசங்களாக கண்டறியப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கும் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வியாழக் கிழமை காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் 14ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, அதேநாள் மாலை 4.00 மணிக்கு அமுல்படுத்தப்பட இருந்ததோடு, அது தற்போது மற்றப்பட்டுள்ளது.

எனவே, அதி அவதானமுள்ள 6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக் கிழமை காலை 6.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசிய சேவை தவிர்;ந்த வேறு தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே காணப்படுகின்றது. யாரும் குறித்த பிரதேசங்களுக்கு உள்நுழைவதோ, அங்கிருந்து வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரும் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தவையாகும் என்றும் அதனை முறையாக நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது.’

Share