கொரோனா பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு இந்திய உயர்நீதிமன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 3.47pm
கொரோனா பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு இந்திய உயர்நீதிமன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

கோவிட் 19 பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அந்நாட்டு தனியார் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அரச அல்லது தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களில் கோவிட் 19 தொடர்பான பரிசோதனைகளுக்கு பணம் அறவிடக் கூடாதென்று உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

NABL தரச் சான்றிதழ் பெற்ற ஆய்வு கூடங்கள், WHO அல்லது ICMR ஊடாக அனுமதி பெற்ற மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரிசோதனைகளுக்காக இந்த ஆய்வு கூடங்கள் மேற்கொள்ளும் செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்குமா? என்ற கேள்விக்கான தீர்மானம் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறான தேசிய அனர்த்தமொன்றின் போது தியாகத்துடன் கூடிய சேவையொன்றை வழங்குவதன் மூலமே நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு கூடங்களின் வகிபாகம் இன்றியமையாதது என்றும் இந்திய உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
Share