சீனாவில் மேலும் ஒரு நகரத்துக்குப் பூட்டு

Staff Writer | Author . Translate to English or සිංහල 10. 04. 2020 | 12.45pm
சீனாவில் மேலும் ஒரு நகரத்துக்குப் பூட்டு

ஒரே தடவையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் கண்டறியப்பட்டதோடு, ரஷ்யா- சீனா எல்லையில் உள்ள சுய்பென்ஹே நகரத்தை லொக்டவ்ன் செய்ய சீனா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சீன வடகிழக்கு வலய சுகாதார ஆணைக்குழு இந்த நோயாளர்களைக் கண்டறிந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து தேச எல்லையைக் கடந்து சீனாவுக்குள் வந்த சீனப் பிரஜைகள் மூலமே சுய்பென்ஹே நகரில் கொரோனா பரவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது. 

சுய்பென்ஹே நகரம் பீஜிங்கில் இருந்து 1600 கி.மி தொலைவில் அமைந்துள்ளதோடு, வூஹான் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட லொக்டவ்னுக்கு சமமானதொரு லொக்டவ்ன் செயன்முறையே இங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, மக்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வெளியில் செல்ல முடியுமாவதோடு, குறித்த தினமே வீட்டுக்குத் திரும்ப வேண்டும். 

குறித்த நகரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொள்ளவும் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையொன்றை நிர்மாணிப்பதற்கும் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
Share