கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை

Staff Writer | Author . Translate to English or සිංහල 09. 04. 2020 | 5.06pm
கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை

சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை வழங்கி, விடுவிக்க கொழும்பு இலக்கம் 6 மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி பிணை வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மாணவனை தனிப்பட்ட பிணையின் அடிப்படையில் விடுவித்தது.
குறித்த மாணவன் பொது மக்கள் பதட்டமடையும் வகையில் செயற்படவில்லை என்று மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான நுவன் போபகே மற்றும் ஷமித் சகந்த தெரிவித்துள்ளனர். பொது மக்களை பதட்டமடையச் செய்யும் நோக்கம் எதுவும் மாணவனுக்கு இருக்கவில்லை என்றும் அது உண்மையா- பொய்யா என்பதை பொலிஸாரால் அறிந்துகொள்ள முடியும் என்றும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் சட்டம், கனணி குற்றச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதவான், குறித்த பல்கலை மாணவனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.

Share