இரத்தினபுரி- பெல்மடுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு

Staff Writer | Author . Translate to English or සිංහල 08. 04. 2020 | 11.12pm
இரத்தினபுரி- பெல்மடுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு

இரத்தினபுரி- பெல்மடுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை காலை (09) 06.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, மாலை 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளபோதும், இரத்தினபுரி பொலிஸ் அதிகாரப் பிரிவு மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவு ஆகியவற்றில் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

மேற்படி இரு பொலிஸ் அதிகாரப் பிரிவுகளின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.

Share