இலங்கை தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளது- சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 06. 04. 2020 | 5.09pm
இலங்கை தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளது- சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

கொரோனா வைரஸ் தொற்றின் நான்கு கட்டங்களில் இலங்கை தற்போது தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் நான்கு கட்டங்களில் பரவுவதோடு, இலங்கை தற்போது அதன் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் பெரும்பான்மையானோர் நோய்த் தொற்றுக்குள்hகி, கட்டுப்படுத்த முடியாத பயங்கர நிலைமைக்குச் செல்வதே நான்காவது மாற்றும் இறுதியான கட்டமாகும்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது பொதுமக்கள் பங்களிப்பின் அடிப்படையிலேயே தங்கியிருப்பதாகவும் குறித்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவிட் 19 போன்ற தொற்று நோய்கள் 4 பிரதான கட்டங்கள் மூலமாக பரவுகின்றது.

1. நோயாளர்கள் இனங்காணப்படாத கட்டம் முதலாவதாகவும்,

2. அங்கும் இங்கும் சிறிதளவு நோயாளர்கள் இனங்காணப்படுவது இரண்டாவது கட்டமாகவும்,

3. கூட்டமாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படுவது மூன்றாம் கட்டமாகவும்,

4. சமூகத்தில் பெரும்பான்மையானோர் நோய்த் தொற்றுக்குள்hகி, கட்டுப்படுத்த முடியாத பயங்கர நிலைமைக்குச் செல்வதே நான்காவது மாற்றும் இறுதியான கட்டமாகும்.

இலங்கை கோவிட் 19 விடயத்தில் தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உட்பட முழு அரச இயந்திரமும் ஒன்றிணைந்து நாட்டினுள் முதலாவது நோயாளர் இனங்காணப்படுவதற்கு முன்னரே பல்வேறு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதைக் கண்டோம்.

- ஆரம்பத்தில் இருந்தே இந்த நோய்த் தொற்று குறித்தும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுப்பது குறித்துமான தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

- ஏற்கனவே நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

- பாடசாலைகள் உட்பட கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

- நாட்டினுள் வரும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

- வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

- நாட்டினுள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை, அந்த சந்தர்ப்பத்தில் இருந்த அவதானத்தின் அளவு, நோய்த் தொற்று கட்டங்கள் மற்றும் காலத்துக்குப் பொருத்தமான முறையில் விஞ்ஞான அடிப்படையிலான விடயங்களையும் பொருட்படுத்தியாகும்.

தற்போது நோய்த் தொற்றை மிகச் சிரமத்துடன் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்திலும் நோய்க் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு காலத்திற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- சமூகத்தில் இருந்து தூரமாகியிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டியவைகள்,

- மாஸ்க் அணியவேண்டியவர்கள் மற்றும் அணிய வேண்டிய சந்தர்ப்பங்கள்,

- தனிமைப்படுத்தல் ஒழுங்குமுறைகள்,

- நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள்.

போன்ற பல்வேறுபட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப, நோய்ப் பரவல் கட்டங்களுக்கேற்ப வினைத்திறன்மிக்க விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான நிபுணர்கள் தேவையை பரிசீலித்துப் பார்த்து, புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

இவற்றை நடைமுறைப்படுத்துவதன் வெற்றி பொதுமக்கள் பங்களிப்பின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.

Share