தனிமைப்படுத்தல் செயற்பாட்டைப் பாதிக்கும்’ பதிவுகள் இட்ட பெண் கைது

Staff Writer | Author . Translate to English or සිංහල 05. 04. 2020 | 6.06pm
தனிமைப்படுத்தல் செயற்பாட்டைப் பாதிக்கும்’  பதிவுகள் இட்ட பெண் கைது

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைப் பரப்பிவந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் செயற்பாட்டைப் பாதிக்கும் வகையில் குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் போலி பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறானவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒழுங்கான முறையில் கொரோனா கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் அதிகமானோருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Share