ஆறு மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு: ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தளர்த்தப்படுகின்றது

Staff Writer | Author . Translate to English or සිංහල 05. 04. 2020 | 1.11pm
ஆறு மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு: ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தளர்த்தப்படுகின்றது


கொரோனா வைரஸ் பரவல் அதிக அவதானமுள்ள ஆறு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கு தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டு 2.00 மணிக்கு மீண்டும் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

மேற்படி நாளை 2.00 மணிக்கு பிரகடனப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வெளியேறுவது அல்லது உள்நுழைவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Share