கொரோனாவால் நிவ்யோர்க்கில் உள்ள இலங்கையர்களும் பாதிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 8.44pm
கொரோனாவால் நிவ்யோர்க்கில் உள்ள இலங்கையர்களும் பாதிப்பு

அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக நிவ்யோர்க் நகரில் வசிக்கும் இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவ்யோர்க்கில் உள்ள இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

நிவ்யோர்க் நிலை குறித்து அங்கிருந்து கருத்துத் தெரிவித்த இலங்கைப் பெண்ணொருவரே இதனைத் தெரிவித்தார். 

‘கொரோனா தொற்று காரணமாக நிவ்யோர்க்கில் உள்ள இலங்கையர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்ப் பரவல் காரணமாக சேவையிடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் சிலர் உள்ளனர். சிலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். 

வயோதிபர்களைப் பராமரிக்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் பயத்தின் காரணமாக வேலைக்குச் செல்வதில்லை. அங்குள்ள வயோதிபர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையர்கள் நடத்திச் சென்ற கடைகளையும் வியாபார நிலையங்களையும் மூடிவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒன்லைனில் முன்பதிவு செய்யப்படும் பொருட்களும் ஏப்ரல் 18 வரை பொறுப்பேற்கப்படுவதில்லை. 

மேலும் நாட்கள் செல்லும் போது, சிலரது கையிருப்பில் உள்ள பணமும் தீந்துவிடும். இது பயங்கரமான நிலையாகும். தூதுவர் காரியாலயத்தில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.’ என்றார்.

Share