முழு நாட்டையும் மூடப்போவதாகக் கூறப்படுவது பொய்- பொலிஸ்

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 6.28pm
முழு நாட்டையும் மூடப்போவதாகக் கூறப்படுவது பொய்- பொலிஸ்

கொரோனா தொற்று அபாயம் காரணமாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு நாடும் மூடப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென பொலிஸ் ஊடக பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கம் இதுவரையிலும் அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இதுபோன்ற போலி செய்திகளைப் பரப்புவோர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பரிசோதனையொன்றை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Share