கொரோனா மற்றும் கோவிட் என பெயரிடப்பட்ட இரட்டைக் குழந்தைகள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 11.56am
கொரோனா மற்றும் கோவிட் என பெயரிடப்பட்ட இரட்டைக் குழந்தைகள்

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் ராய்ப்பூர் பகுதியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் முழு உலகமும் முடங்கிப் போயுள்ள நிலையிலும் தமது குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயர்சூட்டுவதற்கு குறித்த பெற்றோர் தயங்கவில்லையென்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா மற்றும் கோவிட் என்ற சொற்கள் ஏனையோர் மனதில் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் இந்த இக்கட்டான நிலையைத் தாண்டி உலகில் மறவாத சின்னமாக இடம்பிடிக்க வேண்டுமென்பதே இவ்வாறு பெயரிடப்பட்டதன் நோக்கம் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

புதிதாக பிறந்த இரட்டையரில் ஒருவர் ஆண் குழந்தை என்றும் ஏனையவர் பெண் குழந்தையென்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இரண்டு பெயர்கள் மூலமும் தாம் இந்தக் காலகட்டத்தில் எதிர்கொண்ட சவால்கள் நினைவில் இருக்கும் என்றும் குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும் பின்னர் தமது குழந்தைகளின் பெயர்களை மாற்ற உத்தேசித்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 

ஆரம்பமாக மருத்துவமனை அதிகாரிகளை குழந்தைகளுக்கு இந்தப் பெயர்கள் கொண்டு அழைக்க ஆரம்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Share