இலங்கையில் ஐந்தாவது கொரோனா மரணம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 04. 04. 2020 | 8.35am
இலங்கையில் ஐந்தாவது கொரோனா மரணம்

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவர் வெலிகந்த ஆதார மருத்துவமனையில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதோடு, அவருக்கு வேறு எந்த நோய்களும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

Share