நோய் அறிகுறிகள் இல்லாதவர்களும் கொரோனா பரப்புகின்றனர்: அமெரிக்காவில் மருத்துவ மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்படவுள்ளது

Staff Writer | Author . Translate to English or සිංහල 03. 04. 2020 | 7.29pm
நோய் அறிகுறிகள் இல்லாதவர்களும் கொரோனா பரப்புகின்றனர்: அமெரிக்காவில் மருத்துவ மாஸ்க் அணிய பரிந்துரைக்கப்படவுள்ளது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வைரஸ் பரவியுள்ள பிரதேசங்களில் வீட்டைவிட்டு வெளியேறுபவர்கள் மருத்துவ முகக் கவசம் அணிவதை பரிந்துரைக்க டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு நடவடிக்கையெடுக்கத் தயாராவதாக அல்ஜெஸீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ முகக் கவசம் அணியும் பரிந்துரைகள் அதிகமாக மக்கள் நடமாடும் பிரதேசங்களில் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகாத சுகதேகிகள் சாதாரண முகக் கவசம் அல்லது துணியால் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள முடியும் என்றும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி செயற்படக்கூடியவர்கள் விசேட மருத்துவ என்95 முகக் கவசம் அணியவும் பரிந்துரைக்கப்படவுள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆதரவளிப்பார் என்றும் பொது மக்கள் குறித்த பரிந்துரைகளை தம் நலன் கருதி நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share