இந்தியாவில் 20,000 புகையிரத பெட்டிகள் மற்றும் விளையாட்டரங்குகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்படவுள்ளது- 320,000 நோயாளர்களுக்கு இடம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 03. 04. 2020 | 1.02pm
இந்தியாவில் 20,000 புகையிரத பெட்டிகள் மற்றும் விளையாட்டரங்குகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்படவுள்ளது- 320,000 நோயாளர்களுக்கு இடம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கையில், அவற்றை சமாளிப்பதற்காக இந்தியாவில் புகையிரத பெட்டிகள் மற்றும் விளையாட்டரங்குகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

20,000 புகையிரதப் பெட்டிகளை மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய புகையிரத சேவை தகவல் வெளியிட்டுள்ளன. 

ஒவ்வொரு புகையிரதப் பெட்டியிலும் 16 கட்டில்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அதற்கேற்ப, தயார்படுத்தப்படும் புகையிரதப் பெட்டிகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 320,000 பேருக்கான வசதிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இந்திய புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை அதிகரிக்கையில் இந்திய சுகாதார சேவை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் அவதானம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாட்டினுள் மருத்துவர்கள், தாதியர் மற்றும் மருத்துவ உபகரணங்களிலும் தட்டுப்பாடு காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

புகையிரதப் பெட்டிகளுக்கு மேலதிகமாக விளையாட்டரங்குகளை தற்காலிக தனிமைப்படுத்தும் முகாம்களாகவும் மருத்துவமனைகளாகவும் மாற்றியமைக்க அந்நாட்டு பிராந்திய அரசுகள் நடவடிக்கையெடுத்துள்ளன. 

புதுடில்லியில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று நோயாளர்களைப் பராமரிப்பதற்காக ஜெவஹர்லால் நேரு விiயாட்டரங்கை தனிமைப்படுத்தும் முகாமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புது டில்லியில் மத்திய அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

மேலும், வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக தெற்கு ஹைதராபாத்தில் உள்ள கச்போலி விளையாட்டரங்கு 1500 கட்டில்களுடன் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. 

அஸ்ஸாம் மாநிலத்திலும் 1000க்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக சருசாஜய் விளையாட்டரங்கு மருத்துவ சேவை மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Share