உலகில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் தொகை ஒரு மில்லியனைத் தாண்டியது

Staff Writer | Author . Translate to English or සිංහල 03. 04. 2020 | 1.55am
உலகில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் தொகை ஒரு மில்லியனைத் தாண்டியது

உலகில் கோவிட் 19 கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது.

ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளுக்கமைய உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51,485ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 1,002,159 ஆகும்.

ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளுக்கமைய உலகில் அதிகூடியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாவன,

ஐக்கிய அமெரிக்கா – 236,339
இத்தாலி – 115,242
ஸ்பைன் - 110,238
ஜேர்மனி – 84,600
சீனா – 82,432
பிரான்ஸ் - 59,929
ஈரான் - 50,468
ஐக்கிய இராஜ்ஜியம் - 34,164
சுவிட்சர்லாந்து – 18,827
துருக்கி – 18,135
பெல்ஜியம் - 15,348
நெதர்லாந்து – 14,784
ஒஸ்ட்ரியா – 11,108
கனடா – 10,182


Share