செக் குடியரசில் மருத்துவ முகக்கவசம் கட்டாயமா க்கப்பட்டுள்ளது : வீடுகளில் உற்பத்தி செய்ய தேசிய வேலைத்திட்டம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 02. 04. 2020 | 2.30pm
செக் குடியரசில் மருத்துவ முகக்கவசம் கட்டாயமா க்கப்பட்டுள்ளது : வீடுகளில் உற்பத்தி செய்ய தேசிய வேலைத்திட்டம்

செக் குடியரசில் பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாரே மருத்துவ முகக்கவசம் உற்பத்தி செய்வதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

செக் குடியரசில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டுமென்று கட்டாயமாக்கப்பட்டதன் பின்னரே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசின் பிரதமர் என்ட்ரேஜ் பபின்க் தலைமையிலான அரசாங்கம் மருத்துவ முகக்கவசம் அணிவதை கட்டாயமானதாக அறிவித்துள்ளதோடு, ஏனைய நாடுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

செக் குடியரசு மற்றும் ஸ்லொக்வாகியா ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளும் மருத்துவ முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசு, அதன் வெற்றிக்கு காரணமாக மருத்துவ முகக் கவசம் அணிவதே என்று தெரிவித்துள்ளது.

செக் குடியரசில் மருத்துவ முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே, அந்நாடு மருத்துவ முகக் கவசங்கள் வீட்டிலிருந்து தயாரிப்பதை தேசிய வேலைத்திட்டமாக அறிவித்துள்ளது.    

Share