இத்தாலியில் நாளாந்த நோய்த்தொற்று 4000 வரை குறைவடைந்துள்ளது

Staff Writer | Author . Translate to English or සිංහල 31. 03. 2020 | 11.53am
இத்தாலியில் நாளாந்த நோய்த்தொற்று 4000 வரை குறைவடைந்துள்ளது

இத்தாலியில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரங்களில் 812 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,591 ஆக அதிகதித்துள்ளது. மேலும் 100,000க்கு அதிகமானோர் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அல்ஜெஸீரா செய்தித் சேவை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 4,050 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அது கடந்த 2 வாரங்களில் பதிவான ஆகக் குறைந்த நாளாந்த தொகையாகும். 

இத்தாலியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள லொக்டவுன் சேவையை எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினம் வரை நீடிப்பதாக இத்தாலி சுகாதார அமைச்சர் ரொபோர்டோ ஸ்பெரன்ஸா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியாகும் என்பதோடு தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள லொக்டவுன் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை செல்லுபடியாகின்றது.

குறைந்தபட்சம் குறித்த தடையை உயிர்த்த ஞாயிறு தினம் வரை நீடிக்க அரச ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ரொபோர்டோ ஸ்பெரன்ஸா தெரிவித்துள்ளார்.


Share