துருக்கி ஜனாதிபதியின் 7 மாத ஊதியம் கொரோனா நிதியத்திற்கு நன்கொடை

Staff Writer | Author . Translate to English or සිංහල 31. 03. 2020 | 10.51am
துருக்கி ஜனாதிபதியின் 7 மாத ஊதியம் கொரோனா நிதியத்திற்கு நன்கொடை

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தோகான் தனது 7 மாத ஊதியத்தை கொரோனா நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான அனடோலு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

‘எனது 7 மாத ஊதியத்தை வைத்து கொரோனா நிதியத்தை ஆரம்பிக்கின்றேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் 5.2 மில்லியன் துருக்கி லீராக்களை (791,000 டொலர்கள்) குறித்த நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படுகின்ற குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் கோரோனாவுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் அர்தோகான் அறிவித்துள்ளார். 

நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை, விமான சேவைகள் இரத்து மற்றும் பொதுமக்கள் கூடும் பூங்கா போன்றவற்றை தற்காலிகமாக மூடுதல் என்பன துருக்கியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களாகும்.

ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கைப்படி துருக்கியில் 10,827 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Share