6 மாவட்டங்களைத் தவிர ஏனையவைகளில் புதனன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

Staff Writer | Author . Translate to English or සිංහල 30. 03. 2020 | 7.24pm
6 மாவட்டங்களைத் தவிர ஏனையவைகளில் புதனன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

ஏனைய மாவட்டங்களில் இன்று (30) மாலை 2.00 மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி புதன்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் நேரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்படவில்லை. 

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களின் நலனுக்கானதாகும். எனவே அவற்றை பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

களுத்துறை மாவட்டத்தின் அடுலுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அகுரண ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயர் குறிக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமங்களுக்கு உள்நுழைவதோ, கிராமங்களில் இருந்து வெளிச்செல்வதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

Share