புத்தளம் கடயன்குளம் கிராமவாசிகள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பத் தீர்மானம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 29. 03. 2020 | 8.38am
புத்தளம் கடயன்குளம் கிராமவாசிகள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பத் தீர்மானம்


புத்தளம் கடயன்குளம் கிராமவாசிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் முகாமொன்றுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதனடிப்படையில் அவர்களை புத்தளத்தில் உள்ள பாடசாலையொன்றில் நிர்மாணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். 

குறித்த கிராமத்தில் 100 பேரளவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்போதளவில் குறித்த கிராமத்தை முழுமையாக மூடிவைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்ட பின்னரே இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Share