அழிவின் விளிம்பில் கிரீன்லாந்து

Staff Writer | Author . Translate to English or සිංහල 25. 06. 2019 | 11.42pm
அழிவின் விளிம்பில் கிரீன்லாந்து

(டி.எம்.பஸ்லான்)

மனித செயற்பாடுகளின் காரணமாக புவி வெப்பமடைதல் ஒரு தவிர்க்கமுடியாத விளைபொருளாக மாறிவருகிறது. இதனால், பனிப்படலங்கள் முற்றாக உருகும் அபாய நிலையை நோக்கி உலகம் எதிர்நோக்கியிருக்கிறது.

இதுவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய பனிப்படலமான,  கிரீன்லாந்து பனிப்படலமும்  இந்த அபாய நிலைமை பாரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது.  சுமார் 650,000 சதுர மைல்களில் பரந்துகாணப்படும் கிரீன்லாந்து பனிப்படலம்,  பச்சை வீட்டு வாயுக்களால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக நாசாவின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

முன்பு எதிர்பார்த்ததை விட பச்சை வீட்டு வாயுக்கள், கடல்மட்ட உயர்வில் அதிக தாக்கம் செலுத்துவதாகவும் புவி வெப்படைதலின் காரணமாக பனிக்கட்டிகள் உருகுவதனாலேயே  கடல் மட்டம் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக நாசாவின் புதிய பகுப்பாய்வு முறையில் தெரியவந்துள்ளது. இதற்கான தரவுகள் icebridge என பெயரிடப்பட்ட வான்வழி ஆய்வுகளின் மூலம் பெறப்பட்டுள்ளது.

பனிக்கட்டிகள்  தொடர்ந்து இதே வேகத்தில் உருகிவந்தால், கடல் மட்டமும் 19 - 63 அங்குலங்களும் உயரும்.குறிப்பாக, கிரீன்லாந்தின் பனிப்படலத்திலிருந்து மாத்திரம் கடல் மட்டம் 35 அங்குலங்கள் வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்துக்கு வெளியிடப்படும் பச்சைவீட்டு வாயுக்களின் அளவு குறைக்கப்படாவிடத்து இனிவரும் 1000 வருடங்களில் கடல்மட்டம் 17 முதல் 23 அடிவரை உயரும். இதேவேளை, கிரீன்லாந்தின் மொத்த பனிப்படலமும் அழியும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும், பச்சைவீட்டு வாயுக்களின் அளவு குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் பனிப்பாறைகளின் அழிவை இந்த நூற்றாண்டின் இறுதியில் 8 முதல் 25 சதவீதம் வரை குறைக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Share